செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சூனாம்பேடு சாலைக்கு செல்லும் வளைவில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும், பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கிறார்கள். இந்த சாலையின் குறுக்கே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை வைத்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.