கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூர் வழியாக உபரிநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் வழியாக கவுண்டன்புதூர் சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் மழைநீர் செல்கிறது. இந்நிலையில் கால்வாய் முழுவதும் ஏராளமான செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதன் காரணமாக தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் முத்தனூரில் தார் சாலையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. அப்போது தார் சாலையில் இருந்து அள்ளப்பட்ட மண்ணை குளத்தில் போட்டதால் ஏராளமான மண் குவியல் குவியளாக கிடந்தது. இந்நிலையில் பாலம் கட்டி முடிந்துவிட்ட நிலையில் குளத்தில் கொட்டப்பட்ட மண் அகற்றப்பட்டது. இருப்பினும் முறையாக மண்களை அள்ளி தண்ணீர் வெளியேறும் வகையில் பறிக்கப்படாததால் தண்ணீர் குளத்தில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக உபரிநீர் கால்வாய் நெருகிலும் தண்ணீர் தேங்கி அருகாமையில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதுப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து குளத்தில் போடப்பட்டுள்ள மண்களை நன்றாக அகற்றி அந்த குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.