அண்ணாமலை நகர் பேரூராட்சி கே.ஆர். நகர் பகுதியில் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.