கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள பூங்காவில் தினசரி 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். ஆனால் தகுந்த பராமரிப்பு இல்லாததால், பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து வருகிறது. மேலும் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைப்பதோடு, பூங்காவை தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும்.