செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஆகாய நடைமேம்பாலத்தின் கூரை சிதலமடைந்து காணப்படுகிறது. மழை காலத்தில் இந்த மேம்பாலத்தின் வழியே பள்ளி செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் நனைந்தபடி செல்ல வேண்டியுள்ளது. எனவே,நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக இந்த நடைமேம்பாலத்தில் புதிய கூரையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.