'தினத்தந்தி' க்கு பாராட்டு

Update: 2023-06-18 13:51 GMT

அந்தியூர்-கோபி இடையே இயக்கப்பட்டு வந்த ஏ20 என்ற அரசு டவுன் பஸ் 2021-ம் ஆண்டு பிறகு இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அந்தியூர்-கோபி இடையே இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் கடந்த ஒரு வாரமாக இயக்கப்பட்டு வருகிறது. நடவடிக்கை எடுத்த போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்