புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-06-18 11:48 GMT
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் தெற்கு மடத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியின் கான்கிரீட் மூடி சேதமடைந்த நிலையில் இருப்பதாக ராஜசேகர் என்பவர் அனுப்பிய பதிவு `தினத்தந்தி' புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த கான்கிரீட் மூடி சீரமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்