நெல்லிக்குப்பம் ஆலைரோடு பகுதியில் திங்கட்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. ஆனால் அங்கு மேற்கூரை, வியாபாரிகள் அமா்ந்து வியாபாரம் செய்ய இருப்பிடம் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் வியாபாரிகள் வெயிலிலும், மழையிலும் வியாபாரம் செய்வதால், மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே வாரச்சந்தைக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.