கடலூர், மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை, கே.டி.ஆர் நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்புகளில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இவை அப்பகுதியில் உள்ள குப்பைகளை கிலறியும், சேற்றில் புரண்டும் எழுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.