அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்டது கீழநத்தம் கிராமம். இங்குள்ள ஆதியான் ஏரியின் மூலம் 100-க்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆனால் நெல் விளையும் சமயத்தில் ஏரியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு நெற்பயிர்கள் கருகி விடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் ஏரியில் ஆழமில்லாமல் இருப்பதே. எனவே ஏரியில் தண்ணீர் இல்லாத இந்த சூழ்நிலையில் ஏரியை ஆழப்படுத்தி மழைபெய்யும்போது மழைநீரை சேகரித்து தண்ணீர் பற்றாக்குறையை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.