சாலை விரிவாக்கத்தினால் பன்னெடுங்காலமாக பல்வேறு பயன்களை வழங்கிய புளி உள்ளிட்ட மண்ணின் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள சாலையோர மரங்களையும் ஆணி அடித்து, கம்பி கொண்டு கட்டி விளம்பரப் பதாகைகளை மாட்டும் செயல்கள் ஆங்காங்கே தற்போது தொடங்கியுள்ளது. மரங்களுக்கு உயிர் மட்டுமல்லாமல் உணர்வுகளும் உண்டு என்று ஆய்வு முடிவுகள் சொல்லும் வேளையில் மரங்களின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய, பட்டைகளை பட்டுப்போகும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் ஆணி அடித்து விளம்பரப் பதாகைகளை மரங்களில் மாட்டுவதை விரைந்து தடுப்பதோடு ஏற்கனவே ஊரக மற்றும் நகர்ப்பகுதி சாலையோர, பொது இடங்களில் உள்ள மரங்களில் உள்ள பதாகைகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.