ராமநத்தம் அருகே தொழுதூர்-ஆத்தூர் செல்லும் சாலையில் ஆனைவாரி ஓடை செல்கிறது. இதை கடந்து செல்ல ஏதுவாக பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இருப்பினும் பணிகள் முழுவதும் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாலம் கட்டும் பணிகளை விரைந்து தொடங்கி, முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.