சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தெரு பெயர்கள் மற்றும் வார்டு எண்கள் கொண்ட தகவல் பலகை எதுவும் இல்லை. இதனால் புதிதாக இந்த பகுதிக்கு வரும் பொது மக்கள் முகவரியை கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த இடங்களில் வார்டு எண்களுடன் தெரு பெயர் கொண்ட தகவல் பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.