அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு செல்லும் வழியில் குறுக்கே சிறிய பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.