அந்தியூர் அருகே வேம்பத்தி வெள்ளாளபாளையம் சந்தை பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இது சரியாக பராமரிக்கப்படாமல் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் விஷஜந்துகள் நடமாட வாய்ப்பு உள்ளது. ஆபத்தை அறியாமல் அங்கு ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் விளையாட வருகிறார்கள். உடனே விளையாட்டு மைதானத்தில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.