தென்காசி மாவட்டம் கடையம் ரெயில் நிலையம் அருகே உள்ள குமரேச சீனிவாசா காலனி தெருவில் உள்ள மின்கம்பம் அடிப்பாகம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுவதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், உடனே நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.