சிதம்பரத்தில் இருந்து ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முத்தையாநகர் பாலம் உள்ளது. பாலமான் வாய்க்காலை கடந்து செல்ல ஏதுவாக இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் கடந்த பல ஆண்டுகளாக பலத்த சேதமடைந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.