பெருந்துறை ஒன்றியம் விஜயபுரி வாரச்சந்தையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொது கழிப்பறைகள் கட்டப்பட்டன. இவை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் கழிப்பறைகளை சுற்றி முட்புதர்கள், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. உடைந்த கண்ணாடி பாட்டில்களும் வீசப்பட்டு் கிடக்கின்றன. இதனால் சந்தைக்கு வரும் பெண்கள், முதியவர்கள் கழிப்பறைகளை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கழிப்பறை சுவரும் விரிசல்கள் விழுந்துள்ளன. செடி, கொடிகளை அகற்றி கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட அதிகாரிகள் முன்வருவார்களா?