கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் கிராம பொது சேவை மையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பொது சேவை மையத்திற்கு செல்லும் வழியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், மேற்கொண்டு கட்டிட பணி தொடங்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுசேவை மைய கட்டிட பணியை மீண்டும் தொடங்கி, துரிதமாக முடிக்க வேண்டும்.