ராமநத்தம் பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்காக அப்பகுதியில் அம்மா பூங்கா கட்டப்பட்டது. ஆனால் அந்த பூங்கா திறக்கப்படாமல் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து வருகின்றன. மேலும் பூங்காவும் புதர் மண்டி கிடக்கிறது. எனவே சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்வதற்காக அம்மா பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டியது அவசியம்.