அந்தியூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டு ரோட்டில் ஓடி வந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து பலத்த காயம் அடைகின்றனர். மேலும் ரோட்டில் செல்பவர்களை நாய்கள் கடித்து குதறி விடுகின்றன. அதனால் பொதுமக்கள் அச்சத்தில் ரோட்டில் செல்ல வேண்டிய நிலைமையில் உள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.