கடையநல்லூர் புதிய பஸ் நிலையத்தின் வாசலை ஒட்டியவாறு இருசக்கர வாகனங்களை பலரும் நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் பஸ்சுக்காக காத்திருக்கும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பஸ் ஏறுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே, இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.