தென்காசி - அம்பை மெயின்ரோட்டில் முதலியார்பட்டி ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் அருகில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு தினத்தந்தி புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை சீரமைக்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.