ஆவுடையானூர் ஊருணியின் கிழக்குபக்க சுற்றுச்சுவரின் அருகே மின்மாற்றி ஒன்று சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மின்மாற்றியை தாங்கும் விதமாக உள்ள இரும்பு கம்பங்கள் ஊருணியின் உள்பகுதியில் உள்ளது. சமீபத்திய மழையினால் ஊருணியில் மின்மாற்றியை ஒட்டியுள்ள சுற்றுச்சுவரும் இடிந்து உள்ளது. இதனால் மின்மாற்றி எந்த நேரமும் கீழே விழும் அபாயம் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.