தென்காசி-அம்பை மெயின் ரோட்டில் கீழக்கடையம் ரெயில் நிலையம் செல்லும் சாலைமுகப்பில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. தேங்கிய தண்ணீரால் சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.