சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் உள்ள அம்மாபேட்டை பாலம் சேதமடைந்ததால், இடித்து விட்டு புதிதாக கட்டப்பட்டது. ஆனால் பாலம் கட்டப்பட்டு சில மாதங்கள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வெகுதூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே பாலத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
