சேதமடைந்த ரேஷன் கடை

Update: 2023-05-17 15:33 GMT

பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராம நிர்வாக அலுவலகம் அருகில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் விழுந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகி பொருட்கள் வீணாகுகின்றன. மேலும் பொதுமக்கள் தினமும் அச்சத்தோடு தான் பொருட்களை வாங்கி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த ரேஷன் கடையை இடித்து அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும்.

-மணி, மல்லப்பாடி.

மேலும் செய்திகள்