கோபி கொளப்பலூர் பேரூராட்சிக்கு உள்பட்டது போக்குவரத்து நகர். இங்கு கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை, கூண்டுகளோடு ரோட்டில் வைத்தே கழுவுகின்றனர். இதனால் ரோடு சேதமடைந்து பள்ளமாக மாறியுள்ளது. மேலும் இந்த பள்ளத்தில் வாகனத்தில் இருந்து கழுவப்படும் கோழிக் கழிவுகளும், இறகுகளும் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் மிகுந்த இடையூறாக இருக்கிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் இந்த செயல் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்கவும், சிதிலமடைந்த சாலையை சரிசெய்து கழிவுநீரும், மழை நீரும் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?