ஆபத்தான கிணறு

Update: 2023-05-17 12:45 GMT
பாவூர்சத்திரம் அருகே சிவநாடானூர் பஞ்சாயத்து சின்னத்தம்பி நாடார் தெருவின் மேற்கு பகுதியில் சாலையோரம் ஆபத்தான கிணறு உள்ளது. இந்த கிணற்றின் சுற்றுச்சுவர் அருகில் மணல் அரிப்பு ஏற்பட்டதால், அந்தரத்தில் உள்ளது. எனவே அந்த வழியாக செல்கிறவர்கள் கிணற்றுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான கிணற்றைச் சுற்றிலும் கம்பிவேலி அல்லது தடுப்புச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி