கரூர் மாவட்டம், குளத்துப்பாளையம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் வகையில் உபரி நீர் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்த உபரிநீர் கால்வாயில் ஏராளமான செடி, கொடிகள் முளைத்துள்ளன. இதனால் இந்த கால்வாய் வழியாக உபரிநீர், மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் கனமழை பெய்யும் போது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வடிகால் வாய்க்காலை முறையாக தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.