சிறுபாக்கம் பஸ் நிலையம் 1½ கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால், இதுநாள் வரை அங்கு அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் பொதுக்கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுக்கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.