ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களை கடிக்க பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.