செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி முதல் வாஞ்சிநாதன் சிலை வரை உள்ள சாலை படுமோசமாக காட்சி அளிக்கிறது. முற்றிலும் பராமரிப்பு இல்லாத இந்தசாலை கடந்த சில ஆண்டுகளாகவே குண்டும், குழியுமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தும் இந்தச்சாலையை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.