திருச்செந்தூர்-கன்னியாகுமரி நெடுஞ்சாலை மணப்பாடு பகுதியில் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் முறையான பராமரிப்பு இல்லாத நிலையில் விபத்து அபாயம் ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டி உள்ளது. சாலையை முறையாக பராமரித்து விபத்து அபாயம் நீங்க செய்யவேண்டும்.