குப்பைத்தொட்டி வைக்கப்படுமா?

Update: 2023-05-07 12:44 GMT
திருச்செந்தூர் பந்தல் மண்டபம் வழியாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில் சண்முகர் மகால் எதிரில் குப்பைக்கூளமாக உள்ளது. மேலும் அங்கு கால்நடைகளும் சுற்றி திரிவதால் பக்தர்கள் அச்சத்துடனே கோவிலுக்கு செல்கின்றனர். எனவே அங்கு குப்பைத்தொட்டி வைத்து, குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்