புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்

Update: 2023-05-03 18:27 GMT
கடலூர்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தம்பிப்பேட்டை பஸ் நிறுத்தத்திற்கு 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த பகுதியில் வசிக்கும் இரு பிரிவினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போது தகராறில் ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. அதனால் தம்பிப்பேட்டையில் பிரச்சினைகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி