உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூரில் உள்ள மயானப்பகுதிக்கு செல்லும் வழி மிகவும் குறுகிய நிலையில் உள்ளது. மேலும் அங்குள்ள நீரோடையை கடப்பதற்கு அமைக்கப்பட்ட தரைப்பாலமும் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைத்து, முறையான பாதை வசதி ஏற்படுத்தி மயானத்திற்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும்.