தினத்தந்திக்கு நன்றி

Update: 2023-04-30 18:00 GMT
விருத்தாசலம்-திட்டக்குடி நெடுஞ்சாலையில் மாளிகைக்கோட்டம் அருகே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பலகையில் ஓ.கீரனூர் என்ற பெயருக்கு பதிலாக பெ.கீரனூர் என்று தவறாக இருந்தது. இதனால் அப்பகுதிக்கு புதிதாக வரும் வாகன ஓட்டிகள் வழிமாறி வெகுதூரம் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து பெயர்பலகையை புதுப்பித்து, சரியாக எழுதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி