திட்டக்குடி தாலுகா நல்லூர் ஒன்றியம் பெ.பூவனூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இல்லை. இதனால் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பெண்ணாடத்தில் உள்ள தலைமை கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து பணிபுரிந்து வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் முக்கிய தேவைகளுக்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பெ.பூவனூரில் புதிதாக கிராம நிா்வாக அலுவலக கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.