நேரம் தவறி இயக்கப்படும் பஸ்சால் அவதி

Update: 2023-04-30 12:07 GMT

தென்காசியில் இருந்து அம்பை வழியாக பாபநாசத்திற்கு இரவு 9.15 மணிக்கு இயக்கப்பட்டு வந்த வழித்தட எண் 133-இ பஸ் கடந்த சில நாட்களாக இரவு 8.15 மணிக்கே புறப்பட்டு செல்கிறது. இதனால் தென்காசியில் இருந்து இரவு 9 மணிக்கு மேல் வேலை முடித்து அம்பை மற்றும் பாபநாசம் செல்லும் பொதுமக்களும் கடும் அவதியடைந்துள்ளனர். இரவு 9.45 மணிக்குத்தான் அடுத்த பேருந்து உள்ளது. இதனால் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். போக்குவரத்து நிர்வாகம் பேருந்து காலஅட்டவணையை மாற்றியமைக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி