கடலூர் வேணுகோபாலபுரம் அரசு பள்ளிக்கு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை மூடிகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிய மூடிகளை மாற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.