ஈரோடு வில்லரசம்பட்டியில் இருந்து கருவில்பாறைவலசு செல்லும் வழியில் சுடுகாடு அருகே ஊர் வழிகாட்டி பலகை உள்ளது. ஆனால் இதன் மீது தனியார் நிறுவனத்தினர் விளம்பரம் எழுதி வைத்து மறைத்து உள்ளனர். இதனால் அந்த பலகையில் எந்த ஊர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியாமல் அங்கு புதிதாக செல்பவர்கள் குழப்பம் அடைகின்றனர். வழிகாட்டி பலகையில் தனியார் நிறுவனம் விளம்பரம் செய்வதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.