அந்தியூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் கெட்டிசமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையின் மிகவும் வளைவான பகுதியில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இது இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ரோட்டோரம் தவறி விழுந்து விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க இரவிலும் வாகன ஓட்டிகளுக்கு தடுப்புச்சுவர் இருப்பது தெரியும் வகையில் அதில் ஒளிரும் வண்ணப் பெயிண்டுகள் பூச வேண்டும்.