விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.