மகிழ்ச்சியும் கோரிக்கையும்

Update: 2022-04-25 14:57 GMT
சென்னை கோயம்பேடு மார்க்கெட் 18-ம் எண் நுழைவாயில் அருகே குப்பை கழிவுகள் கொட்டும் இடத்தில் போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் சேதமடைந்து இருப்பது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து அங்கு புதிதாக இரும்பு தகடுகள் கொண்டு வேலி போடப்பட்டு உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைக்கும், புகாரை வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்துள்ளனர். மேலும் மார்க்கெட் வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தங்கள் சிறுநீர் கழிப்பிடமாக மாறிவரும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்