குப்ைப கூளமான கடற்கரை

Update: 2023-04-26 10:28 GMT

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கடற்கரை அதிகமான பக்தர்கள் வந்து குளித்து செல்லும் இடமாகும். கடந்த சில நாட்களாக கடற்கரையில் குப்பை கூளங்கள் குவியலாக தேங்கி கிடக்கிறது. தேங்கிய குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு கடுமையான சுகாதாரக்கேட்டையும் ஏற்படுத்துகிறது. கடற்கரையில் தேங்கிய குப்பைகளை உடனடியாக அகற்றி தினமும் சுத்தப்படுத்துவார்களா?

மேலும் செய்திகள்