மணல்திட்டால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-04-26 10:25 GMT
திருச்செந்தூர் சரவணப்பொய்கை சாலையில் உள்ள சலவையாளர் தெருவின் முகப்பில் மணல் குவிக்கப்பட்டு மணல் திட்டாக உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த மணல் குவியலால் பள்ளி செல்லும் மாணவர்கள், முதியோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மருத்துவ அவசர வாகனங்கள் தெருவின் உள்ளே செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்படைகின்றனர். எனவே தெருவை அடைத்து கொட்டப்பட்டிருக்கும் மணல் திட்டை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்