சென்னை பரணி புத்தூர் ஆலமரம் சந்திப்பிலும், கோவூர் பாலத்தின் அருகிலும் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 2 இடங்களிலும் வாகன ஓட்டிகள் கடப்பதற்கு நீண்ட நேரம் ஆகிறது. பரணி புத்தூர் ஆலமரத்தில் இருந்து பெரியபணிச்சேரி செல்ல வழி இருந்தும், தாம்பரம்-மதுரவாயல் இடையே நெடுஞ்சாலை அமைத்த பொழுது இவ்வழி முழுவதுமாக அடைக்கப்பட்டுவிட்டது. இதனால் வெறும் 500 அடி தூரத்தில் பெரியப்பணிசேரிக்கு சென்று வந்தவர்கள் தற்போது 5 கிமீ தூரம் சுற்றி சென்று வருகின்றனர். பழையபடி இந்த சாலையை மீண்டும் திறந்துவிட உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுகிறோம்.