சிறுபாக்கம் அடுத்த கிருஷ்ணாபுரம் வனப்பகுதியில் மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டது. ஆனால், தகுந்த பராமரிப்பு இல்லாததால், தடுப்பணைகள் சேதமடைந்து ஆங்காங்கே விரிசல் அடைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே தடுப்பணையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.