விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா கிழவிகுளம் பகுதியில் தெருநாய்கள், பன்றிகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் தொல்லையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ளவர்கள் பகல், இரவு நேரங்களில் வேலைக்கு சென்று வரும்போது மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையில் படுத்துக்கொள்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?